மகளைக் கொன்றுவிட்டு போலீஸை அலையவிட்ட தாய்! - சிக்கவைத்த சந்தேகம் | Mother, who killed the daughter and watched the police! - embarrassed suspicion

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (19/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (19/12/2018)

மகளைக் கொன்றுவிட்டு போலீஸை அலையவிட்ட தாய்! - சிக்கவைத்த சந்தேகம்

பெற்ற மகளைக் கொன்றுவிட்டு அதை மறைப்பதற்காகக் கடத்தல் நாடகமாடிய தாயைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட குழந்தை

பெரம்பலூர் மாவட்டம், தேவையூரைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளையின் மனைவி கோவிந்தம்மாள். இவர் அழுதுகொண்டே பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், என் 6 வயது பிள்ளைக்கு கொலுசு எடுப்பதற்காக லப்பைகுடிகாடு வந்தேன். அங்கிருந்து பெரம்பலூர் வருவதற்காக அரசுப் பேருந்தில் ஏரி வந்தபோது மயக்கம் அடைந்ததாகவும், தண்ணீர்ப்பந்தல் என்ற பகுதியில் வந்தபோது நினைவு திரும்பியதாகவும் அப்போது கையில் வைத்திருந்த மூன்று மாதக் கைக்குழந்தை, ஐந்தாயிரம் பணம், செல்போன் காணாமல் போனதாகவும் இவற்றை உடனே கண்டுபிடித்துத் தர வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

பெற்ற மகளைக் கொன்ற தாய்

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் குழந்தையைக் கடத்திய நபர்களைப் பிடிக்க தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் என்ன நடந்தது என்று கோவிந்தம்மாளிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். கோவிந்தாம்மாளின் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெற்ற குழந்தையை கொன்ற கோவிந்தாம்மாள்

இந்த விவகாரம் குறித்து வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். ``குடும்ப பிரச்னையால் பெற்ற குழந்தையைத் தாய் கோவிந்தம்மாள் கொன்றுவிட்டு மல்லாபுரம் அருகேயுள்ள உள்ள கிணற்றில் வீசியிருக்கிறார். வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் அதை மறைப்பதற்காகப் பேருந்து ஏரி பெரம்பலூர் வந்திருக்கிறார். பேருந்தில் வரும்போது மயக்கம் அடைந்ததாகவும் கூட உட்கார்ந்திருந்த பெண் ஒருவர் என் குழந்தையையும் பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துசென்றதாகவும் சென்னார். அவர் சொல்லும்போதே மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு அவரை எங்கள் பாணியில் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரை அழைத்துக்கொண்டு கிணற்றில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். பின்னர், முழு தகவலையும் தெரிவிக்கிறோம்'' என்று முடித்துக்கொண்டனர்.