வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (19/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (19/12/2018)

ஏமாற்றிய பருவநிலை! - சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்தான் தமிழகம் அதிக மழைப்பொழிவைப் பெறும். வழக்கமாக, தமிழகத்தில் 48 சதவிகிதம் வரை மழைப்பொழிவு இருக்கும். ஆனால், கடந்த வருடம் இயல்பைவிட 9 சதவிகிதம் குறைவாகவே மழைப் பொழிவு இருந்தது.  

மழை

இந்த வருடம் நல்ல மழை பெய்யும் என முன்னதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய பருவ மழை தாமதமாக நவம்பர் மாதம்தான் தொடங்கியது. பருவமழை முடிய இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் வரும் கோடைக்காலத்தில் சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தண்ணீர்

இந்த வருடம் சென்னையில் சராசரியாக 747 மி.மீ மழைப் பொழிவு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை 343 மி.மீ மட்டுமே பொழிந்துள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னையில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள நாள்களில் ஓரளவு மழைப் பொழிந்தாலும் இந்த ஆண்டு அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 “பொதுவாக, குறைந்த காற்றழுத்ததில் உருவாகும் புயலால் மிக அதிக மழைப் பொழியும். 80 முதல் 100 மி.மீ வரை மழைப் பொழியும். ஆனால், அதில் 40 சதவிகிதம்தான் கஜா புயலால் பொழிந்துள்ளது” என மும்பை ஐ.ஐ.டி கல்லூரிப் பேராசிரியர் ஸ்ரீதர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.