அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை? #VikatanInfographics | Cost of Idly from Apollo hospitals to America, regarding Jayalalitha case

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:20:07 (19/12/2018)

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை? #VikatanInfographics

வெளிநாடுகள் முதல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தொடக்கி வைத்த `அம்மா அரசு உணவகம்` வரை, ஒரு பிளேட் இட்லியின் விலை எவ்வளவு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுகளை அப்போலோ மருத்துவமனை சமர்ப்பித்தது சமீபத்தில் மிகப்பெரிய ட்ரென்ட் ஆகியிருக்கிறது. உணவுக்கு மட்டும் 1.17 கோடி செலவாகியுள்ளது பல்வேறு தரப்பினரால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உணவுச் செலவு ஊடகவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் சேர்த்துக் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. 

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தோ, அவரது உடல்நிலை குறித்தோ அதிகாரபூர்வமாகப் பெரியளவில் தகவல்கள் அளிக்கப்படாமல் இருந்தன. அப்போதைய அமைச்சர்கள், ஜெயலலிதா உடல்நிலை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, `அம்மா நலமுடன் இருக்கிறார். அம்மா இட்லி சாப்பிட்டார்’ போன்ற பதில்களை அளித்தனர். தற்போது அப்போலோவின் மருத்துவமனை பில் வெளியான பிறகு, அப்போலோவின் இட்லி விலை குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. 

உலகம் முழுவதும் கிளைகள் வைத்திருக்கும் சரவண பவன் உணவகத்தின் வெளிநாட்டுக் கிளைகள் முதல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தொடக்கி வைத்த `அம்மா அரசு உணவகம்` வரை, ஒரு பிளேட் இட்லியின் விலை எவ்வளவு என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது...

இட்லி விலை

நீங்க எப்படி பீல் பண்றீங்க