வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (19/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (19/12/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸாரிடம் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ!

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி  நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

துாத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, மே 22-ம் தேதி கலெக்டர்  அலுவகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட கலரத்தை அடக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து சிப்காட், மத்தியபாகம், தென்பாகம், வடபாகம், புதுக்கோட்டை காவல்நிலையங்களில் 243 வழக்குகள் பதியப்பட்டன. இதில் துப்பாக்கிச்சூடு நடந்த 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மீதமுள்ள 178 வழக்குகளை ஒரே வழக்காகப் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸார் விசாரணை செய்ய மதுரைக் கிளை உத்தரவிட்டது.  

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என சி.பி.எம் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவிட்டது. இதன்படி, துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது மதுரைக்கிளை. துாத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தற்காலிக சி.பி.ஐ அலுவலகம் அமைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு வழக்குகள் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

இச்சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டியதாக வியாபாரிகள் சங்கம், வீராங்கணை அமைப்பு, மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவத்தில் பணியில் இருந்த போலீஸார் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த உள்ளூர் மற்றும் வெளி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருக்கின்றனர். தினமும் 11  பேர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க