வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (19/12/2018)

`கிறிஸ்துமஸ் தினத்தில் விடுமுறை இல்லை!’ - வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

கிருஸ்துமஸ் தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும் எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்

சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ளவர்கள் விடுமுறை என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்ப சகிதமாக படையெடுப்பார்கள். இதனால் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்குப் பதிலாக செவ்வாய்தோறும் வார விடுறை அளிப்பார்கள். விலங்குகள் ஓய்வெடுக்கும் வகையிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகவும் செய்வாய் விடுமுறையை பயன்படுத்திக் கொள்வார்கள்.

வண்டலூர் பூங்கா

விடுமுறை தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருவார்கள். இந்த வருடம் கிருஸ்துமஸ் தினம் செய்வாய்கிழமையில் வருகிறது. “தொடர் விடுமுறை மற்றும் அரசு விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் பூங்காவிற்கு வருவார்கள் என்ற காரணத்திற்காக வரும் செவ்வாய்(25.12.2018) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். மேலும் இந்த பூங்காவில் 23 காட்டு மாடுகள் இருக்கின்றன. இதில் லலிதா என்ற காட்டு மாடு கன்று ஈன்றுள்ளது. அந்த காட்டுமாடுகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்” எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க