`3 விஷயங்களை கட்டாயம் கடைப்பிடியுங்கள்’- பா.ஜ.க-வினருக்கு மோடி சொன்ன அட்வைஸ் | 'Keep this three!' - Advice from Modi in video conferencing

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:22 (20/12/2018)

`3 விஷயங்களை கட்டாயம் கடைப்பிடியுங்கள்’- பா.ஜ.க-வினருக்கு மோடி சொன்ன அட்வைஸ்

வேலூர் மாவட்ட பா.ஜ.க-வினரை வீடியோ கான்ஃபரன்ஸில் சந்தித்த மோடி, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பா.ஜ.க-வினரை மாவட்டந்தோறும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்தித்து தேர்தல் பிரசாரத்துக்காக தயார்படுத்தி வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்ட பா.ஜ.க-வினருடன் வீடியோ கான்ஃபரன்ஸில் உரையாடும் நிகழ்ச்சி, வேலூர் அடுத்த அரியூரில் உள்ள நாராயணி மஹாலில் நேற்று நடைபெற்றது. மோடி உருவத்தின் கட்-அவுட் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதனுடன் நின்று பா.ஜ.க-வினர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். வீடியோ கான்ஃபரன்ஸில் மோடி ஆங்கிலத்தில் உரையாடினார். அதை மொழிபெயர்க்க பெண் நிர்வாகி ஒருவர் அமர்த்தப்பட்டிருந்தார். 

வேலூர்


‘பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும்’ என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி இப்போது பேச வேண்டாம்’ என்று மோடி பதிலளித்தார்.

பாஜக

மேலும், மோடி பேசுகையில், ``வேலூர் மாவட்டத்திலிருந்து ராணுவத்துக்கு அதிகளவில் இளைஞர்கள் வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல களப்பணியாற்ற வேண்டும். இதற்காக மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது தகவல், மேம்பாடு, வளர்ச்சி ஆகிய மூன்றையும் மனதில் வைத்துச் செயல்படுங்கள். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறது’’ என்று உரையை நிறைவு செய்தார் மோடி.