டாஸ்மாக் வருமானத்தை வாகனங்களில் வசூலிக்க வேண்டும்- ஊழியர்கள் கோரிக்கை | Tasmac income should be charged in vehicles

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:50 (20/12/2018)

டாஸ்மாக் வருமானத்தை வாகனங்களில் வசூலிக்க வேண்டும்- ஊழியர்கள் கோரிக்கை

 

டாஸ்மாக்

கடலூரில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``டாஸ்மாக் பணியாளர்களிடமும் கடைகளிலும் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கொடுத்த புகச்ரை அடுத்து சென்னையில் தினந்தோறும் கடைகளில் வசூலாகும் தொகை அன்றாடம் அதிகாரிகளால் வாகனத்தில் வந்து வசூலிக்கப்படுகிறது. 

இதேபோல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பற்ற 1396 கடைகளில் வாகனங்களில் வசூல் செய்ய மாநில டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல் மற்ற கடைகளிலும்  ஊழியர்களைத் தாக்கி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் வாகனங்கள் மூலம் வசூல் செய்ய வேண்டும். தமிழகத்தில் திருட்டு எங்கோ எப்பொழுதுதோ நடப்பது போல் இல்லை. இது திட்டமிட்டு நடைபெறும் குற்றமாகத்தான், தொழிலாகத்தான் இருக்கிறது. ஆகவே, இதை சரி செய்வதற்கு காவல்துறை ஒரு ஆய்வு நடத்தி திருட்டு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.