``இனி தனியார் பள்ளியைத் தேடி ஓட மாட்டோம்!''- அங்கன்வாடியிலும் கே.ஜி. பற்றி பெற்றோர்கள் | "We wont go after private schools hereafter!", young mothers happy about government LKG scheme

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (20/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (20/12/2018)

``இனி தனியார் பள்ளியைத் தேடி ஓட மாட்டோம்!''- அங்கன்வாடியிலும் கே.ஜி. பற்றி பெற்றோர்கள்

``இனி தனியார் பள்ளியைத் தேடி ஓட மாட்டோம்!''- அங்கன்வாடியிலும் கே.ஜி. பற்றி பெற்றோர்கள்

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக, செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் இனி கே.ஜி வகுப்புகளும் எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறையால் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சில பெற்றோர்களிடம் கருத்து கேட்டோம். 

அரசு பள்ளி மாணவர்கள்

சுதா - விழுப்புரம்:

``பொருளாதாரத்தில் பின் தங்கிய பெற்றோர்கள்கூட, ஆரம்பக் கல்விக்காக  தனியார் பள்ளிகளைத் தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சரி, தனியார் பள்ளி வேண்டாம், நேரடியாக ஒன்றாம் வகுப்பு சேர்த்துக்கொள்ளலாம் என்றால், மற்ற பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து எங்கள் குழந்தைகளும் ஆசைப்படுகிறார்கள். இதனால், ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி மணிக்கணக்கில் தனியார் பள்ளியில் காத்துக்கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தோம். அரசின் இந்த முயற்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் " என்கிறார் மகிழ்ச்சியாக.

அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள்

தேவி - மதுரை :

``அரசின் இந்தச் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையின் முதல் இரண்டு ஆண்டு கல்விக்கு இனி தனியார் பள்ளியைத் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அரசின் சலுகைகளோடு எங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஆரம்பக்கல்வி, அவர்களின் எதிர்காலத்துக்கு அடிப்படையாய் அமையும் " என்கிறார் மகிழ்வுடன்.