வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:15 (20/12/2018)

`பாதுகாப்புக் கொடுங்க!’ - மாலையுடன் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது.

விருதுநகர் அய்யனார்நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் முதுகலை வரலாறு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதல் விவரம் பெண் வீட்டாருக்குத் தெரிந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், திருமணத்துக்காகத் தற்போது பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

கார்த்திக்ராஜா - மாரீஸ்வரி

இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த கார்த்திக்ராஜா மற்றும் மாரீஸ்வரி ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருப்பசாமி கோயிலில் இன்று காலை திருமணம் செய்துகொண்டனர். பின்னர், கழுத்தில் மாலையுடன் இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

கார்த்திக்ராஜா - மாரீஸ்வரி

தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.