செங்கை புத்தகத் திருவிழா கோலாகலம்... விழிப்பு உணர்வுப் பிரசாரம் தீவிரம்! | Chengai Puthakath thiruvizha in Chengalpattu

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (20/12/2018)

கடைசி தொடர்பு:19:25 (20/12/2018)

செங்கை புத்தகத் திருவிழா கோலாகலம்... விழிப்பு உணர்வுப் பிரசாரம் தீவிரம்!

செங்கல்பட்டில் 'செங்கை புத்தகத் திருவிழா' டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.

செங்கை புத்தகத் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ‘செங்கை புத்தகத் திருவிழா’ வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் ஆகியவை இணைந்து இந்தப் புத்தகக் காட்சியை நடத்திவருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் பிரபல எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள் எனப் பல்வேறு துறைகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் சிறப்புரைகள் விழாவுக்கு வந்தவர்களுக்கு விருந்தாய் அமைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.

செங்கை புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பிரசார ஊர்வலம் செங்கல்பட்டில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பள்ளி கல்லூரி மாணவி, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும், சென்னை பிர்லா கோளரங்கம் போன்று ஒரு சிறிய அளவிலான கோளரங்கம் பத்து நாள்களும் மாணவர்கள் பயனடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்வுகளாக ஐந்து நாள்கள் விஞ்ஞானிகள், எழுத்தாளர்களை மாணவர்கள் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாள் மாலையிலும் கண்காட்சி வளாகத்தில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க