பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் `பசி’ குறித்து நடைபெற்ற விழா! | Food and Dairy Technology function

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (21/12/2018)

கடைசி தொடர்பு:20:57 (21/12/2018)

பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் `பசி’ குறித்து நடைபெற்ற விழா!

`பசி நீக்குவதற்கான சவால்கள் மற்றும் அதைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள்' பற்றி கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நேற்று மற்றும் இன்றும் (20, 21) தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

பால்வளக் கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள உணவுத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 350-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தொழில்நுட்ப வல்லுநர்களின் உரை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் ஆகியவை நடைபெற்றன. கண்காட்சியில் உணவு பதப்படுத்தும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும், உணவுத் தொழிற்சாலைகள் உதவிக்குழுக்கள் ஆகியோர் கண்காட்சியில் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று (21.12.2018) விவசாயிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. க்ரீம், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், குல்பி, நறுமணப்பால், கோவா, யோகர்ட், மோர், லஸ்சி, ரசகுல்லா, குலாப்ஜாமுன் ஆகிய பால் பொருள்கள் தயாரிப்பு, பால் பதப்படுத்துதல், நூடுல்ஸ், மசால் பொடி, ஊறுகாய், வடகம், பழ பானங்கள், பேக்கரி பொருள்கள், கேக்குகள் பப்ஸ், கெட்சப், சாக்லேட், இறைச்சி பொருள்கள் ஆகிய உணவுப் பொருள்கள் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கங்களுடன் கூடிய நேரடிப் பயிற்சி நடத்தப்பட்டன. 

முதல் நாள் கருத்தரங்கை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் சங்கராம் சௌத்ரி மற்றும் உலகளாவிய உணவியல் நிறுவனத்தின் தேசிய தலைவர் சுசாளித்தா தத்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேசிய பல்வள மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் சங்கராம் சௌத்ரி உலக அளவில் இருக்கும் பசியைப் பட்டியலிட்டுக் காட்டி பேசினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். சி. பாலசந்திரன் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் உற்பத்தியைப் பெருக்கவும், அதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம் என விரிவாகப் பேசினார். இரண்டாம் நாள் கருத்தரங்கில் அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.