`மக்கள் பணத்தை விரயம் செய்வதில் குற்றஉணர்ச்சி இல்லையா?' - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி | Madras Hc questioned to TN Government

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (21/12/2018)

`மக்கள் பணத்தை விரயம் செய்வதில் குற்றஉணர்ச்சி இல்லையா?' - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் அரசு ஆடம்பர நினைவிடம் கட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்

குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்ததது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, `தமிழகம் முழுவதும் 3 குழந்தைகள் காப்பகங்கள் மட்டும் பதிவு செய்யவில்லை என அரசு கூறுவதை நம்ப முடியாது' என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்,மக்கள் வரிபணத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், அரசு ஆடம்பர நினைவிடம் கட்டி வருவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மக்கள் பணத்தை விரயம் செய்வதில் குறைந்தபட்ச குற்ற உணர்ச்சி இல்லையா என கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பாகத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட, வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், `முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு அதிகாரிகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் இணைந்து, திடீர் சோதனை நடத்த கூறிய, நீதிபதிகள் சோதனை முடிவுகளை புகைப்பட ஆதாரத்தோடு வரும் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.