நில அபகரிப்பு புகார் - காஞ்சிபுரம் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு! | case filed against school principal regarding land grabbing

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (21/12/2018)

நில அபகரிப்பு புகார் - காஞ்சிபுரம் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு!

காஞ்சிபுரம் பிரபல பள்ளி தாளாளர் அருண்குமார் என்பவர் மீது, அவரின் மனைவி கொடுத்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு புகார்

காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ளது பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் தாளாளராக அருண்குமார் என்பவர் செயல்பட்டு வருகிறார். தேன்மொழி என்பவருக்கும் இவருக்கும் திருமணமாகி பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அருண்குமார், பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி காஞ்சிபுரம்திருமணத்திற்குப் பிறகு தேன்மொழி பெயரில் 1992-ம் ஆண்டு 808 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு தேன்மொழி பெயரில் இருந்த நிலம், அருண்குமாரின் தாய் மனோகரி என்பவரின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மனோகரி இறந்த நிலையில் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அருண்குமார் பெயருக்கு அந்த நிலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘என் பெயரில் உள்ள நிலத்தை என் விருப்பம் இல்லாமல் போலி ஆவணங்கள் தயார் செய்து, நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தேன்மொழி மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் அருண்குமார் மீது காஞ்சிபுரம் நிலஅபகரிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோகரி பெயரில் பத்திரப் பதிவு செய்யும் போது, தேன்மொழியின் கைரேகை பதியப்பட்டுள்ளது. இந்த கைரேகை அவருடையதுதானா என தடயவியல் சோதனைக்குக் காவல்துறையினர் ஆவணங்களை அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க