வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (21/12/2018)

கடைசி தொடர்பு:23:59 (21/12/2018)

‘உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசியுங்கள்!’- கல்வி அதிகாரி உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி

மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இன்று வாசிக்க வேண்டும் எனச் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனால் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை ஒரு மணிநேரம் மாணவர்கள் வாசித்தனர்.

புத்தகம்

செங்கல்பட்டில் டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் 'செங்கை புத்தகத் திருவிழா' நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ‘செங்கை வாசிக்கிறது’ என்ற வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம் செங்கல்பட்டு பகுதியில் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று(21.12.18) மாலை 3.45 முதல் 4.15 வரை மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும் எனச் செங்கல்பட்டு பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் மாலை ஒரு மணிநேரம் பள்ளி வளாகத்தில்  அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர். தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம் என்ற உத்தரவால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க