வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (22/12/2018)

கடைசி தொடர்பு:02:15 (22/12/2018)

தனி மனித உரிமையை பறிக்கும் மத்திய அரசு' - சி.பி.எம் கண்டனம்

 

கே.பாலகிருஷ்ணன்

"கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் விவரங்களை கண்காணிக்கவும், இடைமறிக்கவும் மத்திய அரசின் பத்து புலனாய்வு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அதிகாரமளித்து ஆணை வெளியிட்டுள்ளது தனி மனித உரிமையை பறிக்கும் செயல்" என்று சி.பி.எம் மாநில செயற்குழு  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தனிமனித ரகசியம் எனும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாகும் இது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட  பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு இது எதிரானதாகும். தன் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், முரண்படுவோரை வேவு பார்ப்பதையும், அதன் மூலம் அச்சுறுத்துவதையும் பாஜக அரசு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அணுகுமுறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அடுத்ததாக, உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து அரசு பேச வேண்டுமெனவும், கடந்த 15 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அத்தொழிலைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள்  வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இதனால் விருதுநகர் மாவட்ட மக்களின் பொருளாதார நிலைமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, பட்டாசுத் தொழிலை பாதுகாக்கும் வகையில்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க