வெளியிடப்பட்ட நேரம்: 06:50 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:42 (22/12/2018)

``தங்க தமிழ்செல்வனை நாங்கள் கூட்டணிக்கு இழுக்கிறோமா !" - 200 % பொய்யான தகவல் `அமைச்சர் தங்கமணி'

டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த யாரையும் நான் ரகசியமாகச் சந்திக்கவில்லை என்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகாவில், சின்ன கோவிலூரில், 338.79 கோடி ரூபாய் மதிப்பில், `கொல்லிமலை நீர்மின் திட்டம்' (20 மெகாவாட்) அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். எம்.பி. சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, `உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் போது, விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது என்பது உண்மை. மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகளவு நஷ்ட ஈட்டை தருவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பலகட்ட பேச்சு வார்த்தை நடத்திருக்கிறோம். சில அரசியல் கட்சிகளின் தூண்டுகோலினால்தான் இப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உயர்மின் கோபுரங்களை எதிர்த்து விட்டு, இப்போது ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மின் கோபுரங்களை அமைத்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி  கேரளாவில் ஒரு கொள்கையையும், தமிழ்நாட்டில் வேறொரு கொள்கையையும் பின்பற்றி வருகிறார்கள். நமது அரசு விவசாயிகளின் அரசு, அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வருவதுதான் சரியாக இருக்கும்.

டிடிவி அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனையும், மாரியப்பன் கென்னடியையும் உங்க அணிக்கு இழுக்குறதுக்காக நீங்க ரகசியமா சந்திச்சிங்கன்னு தகவல் வருதே அது உண்மையா? என்ற கேள்விக்கு, சந்திப்பு எதுக்கு ரகசியமா இருக்கணும், இது  நூற்றுக்கு இருநூறு பர்சென்ட் பொய்யான தகவல்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க