`கோவிலூர் கெமிக்கல் ஆலையால் மக்களுக்கு பாதிப்பா?’ - கிராம மக்கள் அச்சம் | Koviloor chemical factory soil test

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:38 (22/12/2018)

`கோவிலூர் கெமிக்கல் ஆலையால் மக்களுக்கு பாதிப்பா?’ - கிராம மக்கள் அச்சம்

காரைக்குடி அருகிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலையால் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய மண்பரிசோதனைக்காக மண் மாதிரி ஆர்.டி.ஓ முன்னிலையில் எடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கோவிலூர் கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்குச் சொந்தமான கெமிக்கல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் விவசாய நிலங்களில் நேரடியாக மழைக்காலத்தில் கலந்து விடுகிறார்கள். இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கெமிக்கல் வாடையால் கோவிலூர் கிராம மக்களுக்கு புற்றுநோய், கிட்னி பாதிப்பு எனத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவிலூர் கெமிக்கல் ஆலையை மூட வேண்டும் என்று இக்கிராமம் மக்களும்,காரைக்குடி சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம முக்கியஸ்தர்களிடம் பேசிய அதிகாரிகள் ``இந்தத் தொழிற்சாலையால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது ஆய்வுகளின்படி உறுதிபடுத்தப்பட்டால் தொழிற்சாலை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தனர் ". அதன்படி நேற்று டி.ஆர்.ஓ, வேளாண்மை துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் விவசாய நிலங்களில் மண் பரிசோதனைக்காக ஜேசிபி மூலம் மண் தோண்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க