விருத்தாசலத்தில் தரை இறங்கிய ராட்சத பலூன் - ஷாக் கொடுத்த ராணுவ வீரர்கள் | Indian army conduct Awareness Program in cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:33 (22/12/2018)

விருத்தாசலத்தில் தரை இறங்கிய ராட்சத பலூன் - ஷாக் கொடுத்த ராணுவ வீரர்கள்

விருத்தாசலம் பகுதியில் வானில் ராட்சத பலூன் பறந்துள்ளது. இதை கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். இந்த பலூன் விருத்தாசலம் அருகே ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள ஏரியில் தரை இறங்கியுள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் திரளாக அந்தப் பகுதிக்கு வந்தனர். தரை இறங்கிய பலூனிலிருந்து ராணுவ வீரர்கள் 10 பேர் இறங்கியதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.

ராட்சத பலூன்

அங்கு இருந்த இளைஞர்கள் ராணுவ வீரர்களை கைகுலுக்கி வரவேற்றனர். உடன் ராணுவ வீரர்கள் பொது மக்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார்கள். பின்னர் பலூனிலிருந்து இறங்கிய லெப்டினன் கர்ணல் விவேக்ஹெலாவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது. நாங்கள் ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெய் பாரத் என்னும் பலூன் சாகசப் பயணம் தொடங்கி நடந்து வருகிறது. நவம்பர் 6ம் காஷ்மீரில் தொடங்கிய பயணம் சுமார் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு 27ம் தேதி கன்னியாகுமரியில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 

நாங்கள் ஒரு குழுவாகப் புறப்பட்டு இளைஞர்களிடையே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். நாங்கள் செஞ்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்றோம், அப்பொழுது எங்களுக்குப் பறக்கும் நேரம் முடிவடைந்ததால் ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் தரை இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவ வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ராணுவ வீரர்கள் பலூன் மற்றும் பொருள்களை மீட்டு தங்களின் ராணுவ வாகனங்களில் ஏற்றி பெரம்பலூர் நோக்கிப் புறப்பட்டனர். ராட்சத பலூன் கிராமப் பகுதியில் தரை இறங்கிய சம்பவம் அப்பகுதி கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.