சபரிமலை செல்ல மதுரை வந்த பெண்களுக்கு எதிர்ப்பு! - இந்து முன்னணி அமைப்பினர் கைது | Hindu munnani party cadres got arrested in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (22/12/2018)

கடைசி தொடர்பு:12:45 (22/12/2018)

சபரிமலை செல்ல மதுரை வந்த பெண்களுக்கு எதிர்ப்பு! - இந்து முன்னணி அமைப்பினர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினரை, மதுரையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்து அமைப்பினர் கைது

'சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்' என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், சபரிமலைக்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தது `மனிதி' இயக்கம். அவர்களது பயணத்தில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது அவர்கள் சபரிமலைக்குப் பயணத்தைத் தொடங்கினர். இந்நிலையில் அவர்கள் மதுரைக்கு வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் இறங்க முயற்சி செய்தனர்.

சபரிமலை செல்லும் பெண்களை தடுத்ததால் கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினர்

இதைத் தெரிந்துகொண்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி ஆதரவாளர்கள் 11 பேரை கைது செய்துள்ளனர். சபரிமலை செல்லும் மனிதி அமைப்பைச் சார்ந்த பெண்கள் தற்போது மதுரையில் தங்கி உள்ளதாகவும் கண்டிப்பாக சபரி மலையில் ஐப்பனை தரிசனம் செய்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.