``வேள்பாரி நாவல் வெளியீட்டு விழா!" - வாசகர்களை அன்போடு அழைக்கிறோம் | Velpari book launch event

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (22/12/2018)

கடைசி தொடர்பு:14:04 (22/12/2018)

``வேள்பாரி நாவல் வெளியீட்டு விழா!" - வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்

வேள்பாரி

வாசகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற `வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலாக வெளிவரவிருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்.

நிறைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேள்பாரி தொடரிலிருந்து பெயர் தேர்வு செய்து சூட்டியிருக்கிறீர்கள். அவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அப்படிப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் velpari@vikatan.com என்ற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும், விழா நாளன்று வாசகர்கள் பங்குகொள்ளும் விவாத நிகழ்ச்சி ஒன்றையும் திட்டமிடுகிறோம். இதில் கலந்துகொண்டு பேச விரும்பும் வாசகர்கள் ``வேள்பாரித் தொடரின் சிறப்புகள் என்ன" என்பதை 2 நிமிட வீடியோவாகப் பதிவு செய்து "8754444121" என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும். வேள்பாரி ஆசிரியர் சு.வெங்கடேசன் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார். அவர்களுக்கு விவாத நிகழ்ச்சியில் வேள்பாரியைப் பற்றிப் பேசும் வாய்ப்புண்டு.

விழா தொடர்பான அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:  https://www.facebook.com/groups/500337410392609/

நீங்க எப்படி பீல் பண்றீங்க