உத்திரகோசமங்கையில் காட்சியளித்த நடராஜர்!- பரவசத்தில் பக்தர்கள் | Natarajar temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (22/12/2018)

உத்திரகோசமங்கையில் காட்சியளித்த நடராஜர்!- பரவசத்தில் பக்தர்கள்

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் மரகத நடராஜர் சிலையின் சந்தனக் காப்புகளையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மரகத நடராஜர் சன்னிதியில் திரண்ட பக்தர்கள்

ராமநாதபுரம் அருகே உள்ள உத்திரகோசமங்கையில் அருள்மிகு மங்களநாதசுவாமி - மங்களேஸ்வரி தாயார் கோயில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மரகத கல்லினால் ஆன நடராஜர் சிலை உள்ளது. வெளிச்சம் மற்றும் அதிர்வுகளிலிருந்து இந்த மரகதச் சிலை சேதமடையாமல் இருக்க வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜரின் சிலையில் பூசப்பட்டுள்ள சந்தனம் இன்று ஒரு நாள் மட்டும் களையப்படும்.

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு உத்திரகோசமங்கை ஆலயத்தில் உள்ள மரகதக் கல் நடராஜரின் சிலையில் உள்ள சந்தனக் காப்பினைகளையும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. பக்தர்கள் முன்னிலையில் சந்தனக் காப்பு களையப்பட்டு 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து சந்தனாதித் தைலம் பூசப்பட்டுச் சிறப்பு அலங்கார நிலையில் நடராஜர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி  மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு 10.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகமும், அதன் பின் கூத்தர் பெருமான் எழுந்தருளி நடக்கும் நிலையில் நாளை காலை 4 மணி அளவில் அருணோதய காலத்தில் மரகதக் கல் நடராஜரின் சிலைக்கு மீண்டும் சந்தனக் காப்பு பூசப்படும்.