தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் கேரளாவில் விபத்து! - 3 பேர் படுகாயம் | Chennai devotes gets hurt in kerala accident

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (22/12/2018)

தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் கேரளாவில் விபத்து! - 3 பேர் படுகாயம்

சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்ற சிறிய பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து

சென்னையில் இருந்து ஒரு சிறிய பஸ்ஸில் 22 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றனர். சபரிமலை சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் இன்று மாலை திரும்பியுள்ளனர். பத்தணம்திட்டா அருகில் உள்ள லஹாய் பகுதியில் ஒரு பெரிய வளைவில் பஸ் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பஸ்ஸில் ஒரு குழந்தை உட்பட 22 பேர் இருந்தனர். இதில் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலின் பேரில் காவல் துறை, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளானவர்கள் சென்னையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் குறித்த முழு விபரங்களும் முழுமையாக வெளியாகவில்லை.