நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்! - தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரம்! | Congress party starts 2019 general election works

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (24/12/2018)

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்! - தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரம்!

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயார் செய்து வரும் காங்கிரஸ், மக்களின் முக்கியப் பிரச்னைகளை அறிந்துகொள்ள முடிவு செய்து ஒரு குழுவை உருவாக்கி அதற்கு ப.சிதம்பரத்தை தலைவராக்கியுள்ளது. இக்குழுவினர் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று பல தரப்பு மக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

சிதம்பரம்

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 22-ம் தேதி ப.சிதம்பரம் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தொழில்களைச் செய்து வரும் 73 அமைப்புகள் கலந்துகொண்டன. இதில் தமிழ் திரைப்படத்துறை சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி அக்கூட்டத்தில் பேசிய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கஸாலியிடம் பேசினோம். ``தமிழ் திரைப்படத்துறை சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி கருத்துக் கேட்புக் குழுவிடம் மனுவை  கொடுத்துவிட்டு, முக்கியமான சில விஷயங்களை மட்டும் அக்கூட்டத்தில் பேசினேன்,  திரைப்படத்துக்கான ஜி.எஸ்.டியை 5 முதல் 7 சதவிகிதத்துக்குள் கொண்டு வர வேண்டும். 

கஸாலி

பைரஸியை மத்திய அரசு பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ போன்ற சர்வீஸ் புரவைடர் மூலம் கட்டுப்படுத்த வேண்டும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், வருடத்துக்கு தமிழில் 25 முதல் 50 படங்கள் வரை நிதி கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தரமான படங்கள் வருவது சாத்தியமாகும். அனைத்து வங்கிகளும் படம் தயாரிக்க சட்டபூர்வமான வகையில் கடன் கொடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று பேசினேன். நான் பேசியதை ப.சிதம்பரம் கவனமாக  குறிப்பெடுத்தார். நான் அரசியல் கட்சி சாராதவன். திரைப்படத்துறையிலுள்ள பிரச்னைகளை கூறியுள்ளேன். நல்லது நடந்தால் மகிழ்ச்சி'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க