வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (24/12/2018)

கடைசி தொடர்பு:12:32 (24/12/2018)

``தமிழில் குடமுழுக்கு செய்தது குற்றமா?"- அறநிலையத்துறைக்கு எதிராகக் களத்தில் நிற்கும் திருமுக்கூடலூர்!

மணிமுத்தீஸ்வரர் கோயிலுக்குக் குடமுழுக்கு செய்து 16 வருடங்கள் ஆகிவிட்டதால், மறுபடியும் குடமுழுக்கு செய்ய கிராம மக்கள் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால், மீண்டும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்துவிடக் கூடாது என்பதற்காக தங்களை இந்து சமயநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து வருவதாக திருமுக்கூடலூர் மக்கள் குமுறுகிறார்கள்.

``தமிழில் குடமுழுக்கு செய்தது குற்றமா?

ங்கள் ஊரில் இருக்கும் இரண்டு கோயில்களில்  தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி  குடமுழுக்கு செய்திருக்கிறார்கள் திருமுக்கூடலூர் கிராம மக்கள். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு பதினாறு ஆண்டுகள் கடந்தும் குடமுழுக்கு செய்யப்படாமல் இருப்பதாகவும், தமிழ் முறைப்படி தாங்கள் குடமுழுக்கு செய்துவிடக் கூடாது என்பதற்காக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வஞ்சிப்பதாகவும் திருமுக்கூடலூர் மக்கள் குமுறுகிறார்கள். இதற்காக 2000 பேரிடம் கையெழுத்து வாங்கி, அதை அரசுக்கும் அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.


 குடமுழுக்கு நடக்காத மணிமுத்தீஸ்வரர் சிவன் கோயில் 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது திருமுக்கூடலூர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் எல்லோரும் தமிழ்ப்பற்று மிக்கவர்கள். கோயில் குடமுழுக்கு முதல் வீடுகளில் நடக்கும் திருமணங்கள், புதுமனை புகுவிழாக்கள் வரை அனைத்தையும் தமிழ்முறைப்படிதான் செய்கிறார்கள். அதோடு, இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களையே சூட்டுகிறார்கள். 

இந்த கிராமத்தில் 500 வருடங்கள் பழைமையான மணிமுத்தீஸ்வரர்  கோயில் உள்ளது. 2002- ல் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி இந்தக் கோயிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்பட்டது.  சமீபத்தில் இங்குள்ள பகவதி அம்மன் கோயிலையும் புனரமைத்து, தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்தார்கள். 

திலீபன்  மணிமுத்தீஸ்வரர் கோயிலுக்குக் குடமுழுக்கு செய்து 16 வருடங்கள் ஆகிவிட்டதால், மறுபடியும் குடமுழுக்கு செய்ய கிராம மக்கள் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால், மீண்டும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்துவிடக்கூடாது என்பதற்காக தங்களை இந்து சமயநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து வருவதாக திருமுக்கூடலூர் மக்கள் குமுறுகிறார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய திருமுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த திலீபன்,   ``2002 ம் ஆண்டு மணிமுத்தீஸ்வரர் உடனுறை மணிமேகலை கோயிலைச் செப்பனிட்டு, தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி குடமுழுக்கு செய்தோம். முதலில் அறநிலையத்துறை  அனுமதிக்கவில்லை. பெரிய அளவில் போராட்டம் நடத்தி அனுமதி பெற்றோம். கீற்றுக் கொட்டகையில் இருந்த பகவதி அம்மனுக்குக்  கோயில் அமைத்து அதற்கும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்தினோம்.  கோவை பேரூரில் உள்ள மணிவாசகர் திருப்பணி மன்றத்தைச் சேர்ந்த குமரலிங்கமும், கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் கோயிலைச் சேர்ந்த சிவ.செந்திலும் சேர்ந்துதான் பகவதி அம்மன் கோயிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்து வைத்தார்கள். இப்போது மணிமுத்தீஸ்வரர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய வேண்டும். ஆனால், நான்கு வருடங்களாகக் குடமுழுக்கு செய்யாமல் இழுத்தடித்து வருகிறது அரசு" என்றார் வேதனையோடு!.

மணிமுத்தீஸ்வரர்

 வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவரிடம் பேசினோம்.

``2002லயே தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யச்சொல்லி கடுமையாகப் போராடினோம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதிக்கவில்லை.  சிவனடியார்களான சிவ.ராஜேஷ், சிவ.முத்து இருவரும் கரூர் பத்திரப் பதிவு தமிழ் ராஜேந்திரன்(வழக்கறிஞர்)அலுவலகம் அருகே இருக்கும் செல்போன் டவரில் ஏறி, `மணிமுத்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய அனுமதிக்காவிட்டால் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வோம் என்று போராடினார்கள். தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி அவர்களைப் பிடிக்கப் பார்த்தார்கள் ஆனால் சிவனடியார்கள் கையோடு கத்திகளையும் கொண்டு போனார்கள். `தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி வந்தால், தற்கொலை செய்துகொள்வோம்' என்று சொல்ல அதிகாரிகள் செய்வதறியாது தவித்தார்கள். அப்போது இதைத் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் பெரிதாக வெளிப்படுத்தின. லண்டன் பி.பி.சி சேனலும் இங்கு வந்து நேரலை செய்தது. இதனால், பிரச்னை பெரிதாக, வேறு வழியில்லாமல் அப்போதைய கரூர் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்ய அனுமதித்தனர்.

இதைக் கேள்விப்பட்ட கலைஞர் முரசொலியில், `தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ததைக் கேள்விப்பட்டதும் காதில் தேனாறு பாய்ந்தது' என்று எழுதினார். இப்போது மணிமுத்தீஸ்வரர் ஆலயத்துக்குக் குடமுழுக்கு நடத்தி 16 வருடங்கள் ஆகிவிட்டன. ஆகம விதிகள்படி 12 வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும். மறுபடியும் மணிமுத்தீஸ்வரருக்கு குடழுக்கு நடத்த அனுமதி கேட்டு நான்கு வருடங்களாக திருமுக்கூடலூர் கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். `தமிழ் முறைப்படி மணிமுத்தீஸ்வரர் ஆலயத்திற்குக் குடமுழுக்கு நடத்தினால், ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஆபத்து' என்று புரளி கிளப்பிவிட்டு, குடமுழுக்கு செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள். மணிமுத்தீஸ்வரர் கோயிலில் பூஜைகள்கூட சரிவர நடக்கவில்லை  பூட்டி வைத்திருக்கிறார்கள். அறநிலையைத் துறையைக் கண்டித்து தொடர் போராட்டங்களுக்குத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.

இது தொடர்பாக கரூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூர்யநாராயணனிடம் பேசினோம். ``தொல்லியல் துறை சூர்யநாராயணன்(இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்)ரிப்போர்ட் வாங்கியாச்சு. திருப்பணிகள் விரைவில் தொடங்கும்" என்றவர், ``திருமுக்கூடலூர் மணிமுத்தீஸ்வரர் கோயில் திருப்பணிகள் சம்பந்தமா தாந்தோணி இ.ஓ-தான் இன்சார்ஜ். அவரிடம் பேசுங்கள்" என்றார். தாந்தோணி செயல் அலுவலர் சுரேஷிடம் பேசினோம்.

`` `தமிழ்முறைப்படி மணிமுத்தீஸ்வரருக்கு குடமுழுக்கு பண்ணணும்'ங்கிறது ஊர்மக்கள் வைக்கும் கோரிக்கை. அதை பரிசீலனை பண்ண வேண்டியது உயரதிகாரிகளும், அரசும்தான். மத்தபடி, அதற்காக அந்தக் கோயில் திருப்பணிகளை  நாங்க செய்யாமல் இருக்கிறோம்ன்னு சொல்றது அபாண்டமான குற்றச்சாட்டு. தொல்லியல் துறை ரிப்போர்ட்டை இப்போதான் வாங்கி இருக்கோம்.  கமிட்டி அமைத்து, ஆய்வு செய்து, நிதி ரிலீஸ் பண்ணி, அப்புறம்தான் புனரமைப்புப் பணிகள் தொடங்கும். மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள்தான்" என்று அனைத்தையும் மறுத்தார். ஆனால், ``தொல்லியல் துறை ரிப்போர்ட் வாங்கிட்டோம். புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்'ன்னு மூன்று ஆண்டுகளா இதே பதிலைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்க குடமுழுக்கு செய்ய ஆர்வப்படுறதா தெரியவில்லை. எங்கள் போராட்டங்கள் அவர்களை செயல்பட வைக்கும்" என்று ஆக்ரோஷமாக சொல்கிறார்கள் திருமுக்கூடலூர் கிராம மக்கள்.  
  


டிரெண்டிங் @ விகடன்