`பேரியம் உப்பு இல்லாத பட்டாசுகளைத் தயாரிக்கலாம்' - ஆலைகளைத் திறக்க ஆட்சியர் உத்தரவு! | virudhunagar collector orders to open Crackers factory

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (24/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (24/12/2018)

`பேரியம் உப்பு இல்லாத பட்டாசுகளைத் தயாரிக்கலாம்' - ஆலைகளைத் திறக்க ஆட்சியர் உத்தரவு!

'பட்டாசு ஆலைகளைத் திறந்து, பேரியம் உப்பு இல்லாத பட்டாசுகளைத் தயாரிக்கலாம்' என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை

சரவெடிகள் தயாரிப்பதற்கும், வேதிப்பொருளான பேரியம் உப்பு பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.  தற்போது தயாரிக்கப்படும் பட்டாசுகளில் Rockets, Amorces Roll caps, Dot caps, Ring caps, Atom Bombs, Chorsa, Maroons (Lakshmi, Kuruvi, etc..), Red sparklers, Red colour matches, Yellow colour matches, Red pellets, Yellow pellets ஆகிய 40-50 சதவிகித பட்டாசுகளை பேரியம் உப்பு இல்லாமல் தயாரிக்க முடியும் என பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிவஞானம்

எனவே, அனைத்து பட்டாசு நிறுவனங்களும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ள பேரியம் உப்பு இல்லாத பட்டாசுகளைத் தயாரிக்கலாம். உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்காக காத்திராமல், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி உடனடியாக பட்டாசு நிறுவனங்களைத் திறந்து செயல்படுத்தலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.