காசர்கோடு முதல் குமரி வரை இன்று நடைபெறுகிறது `ஐயப்ப ஜோதி சரண கோஷம்!’ | Protest for sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (26/12/2018)

கடைசி தொடர்பு:06:59 (26/12/2018)

காசர்கோடு முதல் குமரி வரை இன்று நடைபெறுகிறது `ஐயப்ப ஜோதி சரண கோஷம்!’

பரிமலை விவகாரத்தில் ஐயப்பனின் புனிதம் காப்போம் என்ற தலைப்பில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப ஜோதி சரண கோஷம் நிகழ்ச்சி நடக்கிறது.

சபரிமலை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றன. கேரளத்தில் பா.ஜ.க. மற்றும் சங்கபரிவார் அமைப்புகள் சி.பி.எம். அரசுக்கு எதிராக ரத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என வலியுறுத்தி ஐயப்ப தர்ம சேனா சார்பில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப ஜோதி சரண கோஷம் என்ற நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 26) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடக்கிறது.

சபரிமலை

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் கையில் தீபம் ஏந்தி நின்று சரண கோஷம் எழுப்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை இந்து கோயில் கூட்டமைப்பு செய்துவருகிறது.