வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (26/12/2018)

மதுரைக்கு வந்த இராணுவ வீரர்களின் விழிப்புஉணர்வு இராட்சத பலூன்!

இராணுவத்தில் இளைஞர்கள் விருப்பத்தோடு சேர வேண்டும் என  இந்திய இராணுவத்தின் சார்பாக  2 இராட்சத பலூன் மூலம் மதுரையில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பலூன்

இந்திய ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களும், பெண்கள் சேர முயற்சி செய்ய வேண்டும், என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் முப்படைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்ற மாநிலங்களில் அதிகம் பணிபுரிந்தனர். ஆனால், தற்போது அது குறைந்துள்ளது. முன்பு போலவே மீண்டும் பாதுகாப்புத் துறைகளில் தமிழர்கள் அதிக நபர்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் தெரிவித்துவருகிறார்.

இராணுவ பலூன்

இந்நிலையில் இராணுவத்தில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் ஆர்வத்தோடு இணைய வேண்டும் என இந்திய இராணுவம் சார்பாக விழிப்புஉணர்வு செய்யப்பட்டுவருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் இரண்டு இராட்சத பலூன்களின் மூலம் ஜம்மு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பல்வேறு மாநிலங்களிலும் விழிப்புஉணர்வு செய்துவருகின்றனர். அதன்படி கடந்த நவம்பர் 6 -ம் தேதி 45 பேர்கொண்ட இராணுவ குழு பயணித்துவருகிறது. இதற்கு சிறப்பு பேருந்து வசதிகளையும் செய்துகொண்டு பலூன்கள் மூலம் ஆங்காங்கே பல இடங்களில் இராணுவத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறிவருக்கின்றனர்.

ராணுவ வீரர்

இந்நிலையில் இன்று மதுரை ரிசர்வ் லைன் 6வது பட்டாலியன் போலீஸ் மைதானத்தில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் கலந்துகொண்டு,  இராட்சத பலூனில் குறிப்பிட்ட தூரம் பறந்து மீண்டும் கீழே இறங்கினார். அவருடைய அனுபவத்தை செய்தியாளர்களிடம் பேட்டியும் அளித்தார். இந்த பலூன் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி வழியாக மதுரை வந்தடைந்தது.

மதுரை

இதனை தொடர்ந்து நெல்லை வழியாக வரும் 30 -ம் தேதி கன்னியாகுமரியை அடைந்து விழிப்புஉணர்வு பயணத்தை நிறைவு செய்யலாம் என  இராணுவ குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.