மின்வயர் அறுந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலி -மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் எனக் குற்றச்சாட்டு | 10 goats are died because of damaged electric line

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (26/12/2018)

மின்வயர் அறுந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலி -மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் எனக் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் பழுதடைந்த மின் கம்பத்தில் இருந்து  மின்கம்பிகள் எதிர்பாராத விதமாக  அறுந்து விழுந்ததில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மின்வாரியத்தின் தொடர் அலட்சியத்தால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

மின் வயர்

தூத்துக்குடி மாவட்டம் மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ளது சிந்தலக்கரை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் முழுவதும் மானாவாரி விவசாயத்தைத்தான் நம்பி உள்ளனர். அதனால், விவசாயத்துடன் இணைந்த  ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 இந்த கிராமத்தின் தெருக்களில் உள்ள  மின்கம்பங்களின் அடிப்பகுதி   சேதமடைந்து வெளியில் கம்பிகள் தெரியும் வகையில்  எலும்புக்கூடாகவே காட்சி அளிக்கிறது.  அத்துடன்,  இந்த கிராமத்தில் உள்ள மின்வயர்கள் அனைத்தும் மிகவும் தாழ்ந்து இருப்பது மட்டுமில்லாமல்,   பழுதடைந்து அறுந்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதற்கு முன்பாக மின்வயர்கள் எதிர்பாராத நேரங்களில் திடீரென அறுந்து விழுகிறது எனவும் இப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.  

சேதமான மின்கம்பம்

 கடந்த 6 மாதங்களில் இதுவரை இரண்டு முறை மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் உயிரிழந்த நிலையில், இன்றிரவு மீண்டும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளது. இந்த  கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது ஆடுகள் மீது மின்சாரம் தாக்கியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்க கிராமத்துல உள்ள தெருக்களின் மின்கம்பங்கள் அடிப்பகுதி சேதமான நிலையில்  ஆபத்தாக இருக்கு. இது சம்மந்தமா, பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளிப்போம். ஆனால், பழுதானதாக சொல்லப்பட்ட மின்கம்பங்களில் வெறும் மின் வயர்களை மட்டும் முறுக்கிவிட்டு  செல்வதை தான் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுதவிர, அதனை மாற்றி விட்டு புதிய  வயர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. 

ஆடுகள்

என்ன பிரச்னை, எதனால் இந்தப் பிரச்னை என்பது குறித்து பார்ப்பதே இல்லை. இதற்கு முன்பு கடந்த 6 மாதத்தில் 2 ஆடுகள்தான் உயிரிழந்தன. ஆனால், பலமுறை புகார் கூறியும்  மின்சாரவாரியம் சரியான நடவடிக்கை எடுக்காததால், மின்வயர் அறுந்ததால் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

மக்கள்

இதில் 7 ஆடுகள் சினையான ஆடுகள். மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை கொட்டகையில் அடைப்பதகற்காக மாரியப்பனும், அவரது மனைவி மல்லிகாவும்  அழைத்து வரப்பட்ட 10 ஆடுகளும் இறந்து போயிட்டு.  இதனால், ரூ.1.5 லட்சம் இழந்துள்ளனர். ஆடு, மாடுகளுடன் அல்லாமல் மனித  உயிரிழப்பு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மின் வயர் அறுந்து விழுந்து 10 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க