வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (26/12/2018)

``பாஜகவுடன் முன்பு கூட்டணி வைத்திருந்தது கொள்ளையடிக்கத்தானா?” -ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கபோகிறது என்று அரசல் புரசலாக உலவிக் கொண்டிருக்கும் தகவலை மெய்ப்பிப்பது போல அதிமுக நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். 

அதிமுக ராஜன் செல்லப்பா

திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, ''அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைப்பது கொள்ளைடிப்பதற்குத்தான்  என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி என்றால் முன்பு திமுக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்தது கொள்ளையடிக்கததனா? யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும். தோல்வி பயம் காரணமாக அதற்குள் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்தி முதல்வரும், துணை முதல்வரும் பெற்று தந்துள்ளனர். அதேபோல் கஜா நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினுக்கு என்ன என்ற தொனியில் பேசியுள்ளார்.

இதை ஆமோதிப்பதுபோல, ``கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம். அதை தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம், அதிமுகவுடன் கூட்டணியா என்பது அப்போது தெரியும்' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சூசகமாக தெரிவித்துள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க