வெளியிடப்பட்ட நேரம்: 05:10 (26/12/2018)

கடைசி தொடர்பு:05:10 (26/12/2018)

``பழங்குடி இனமாக அறிவிக்க வேண்டும்!” -தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீர் மரபினர்

சீர்மரபினர் (DNC) என்று அழைக்கப்படும் தங்களை, பழங்குடி இனமாக (DNT) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சீர் மரபினர்


இப்போராட்டம் குறித்து நம்மிடம் பேசியவர்கள், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகிறோம்.  1979 வரை சீர்மரபினர் பழங்குடியினர் என்று இருந்த தங்களை, சீர்மரபினர் என்று அரசு மாற்றியது. அதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். அப்படி வெளியிட்ட தமிழக அரசின் அரசாணையை ( G.O.MS.No. 1310/30.07.1979) ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். முன்பு வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசு சலுகைகளை திரும்பப் பெறவும்,  ராணி வேலுநாச்சியார்  நினைவு தினமான இன்று(25-12-2018) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பேச்சியம்மாள் தலைமையில் தொடங்கியுள்ளோம். இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அதிகமான அளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்'' என்றனர்.  இப்போராட்டத்தில்  விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சீர்மரபினர் நலசங்கத்தின் மாநிலத்தலைவர் ஜெபமணி, மாநில பொதுச் செயலாளர் நவமணி உட்பட பல தலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க