வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (26/12/2018)

கடைசி தொடர்பு:09:52 (26/12/2018)

திருவள்ளூரில் கொலை செய்யப்பட்ட தாய் -ஆந்திராவில் கைதுசெய்யப்பட்ட மகளின் காதலன்

திருவள்ளூர் மாவட்டத்தில், ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து மகளே கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலன் சுரேஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 சுரேஷ்

நேற்று, திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் ஃபேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை  கொலைசெய்த  வழக்கில், மகள் தேவிப்பிரியா மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தியபின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், விக்னேஷுக்கு 17 வயது என்பதால் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

தேவிபிரியா

இந்நிலையில், ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி  இருந்த தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷை போலீஸார் நேற்று நள்ளிரவு கைது செய்து, திருவள்ளூர் கொண்டுவந்தனர். சுரேஷை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பானுமதியின் உடல் அடக்கம்செய்யப்பட்டது.