8,000 சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவு! - அதிர்ச்சியில் ஏழைப் பெற்றோர்கள் | Tamil Nadu Government Decide to Close 8,000 noon- meal centers.

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (26/12/2018)

கடைசி தொடர்பு:15:55 (26/12/2018)

8,000 சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவு! - அதிர்ச்சியில் ஏழைப் பெற்றோர்கள்

தமிழகத்தில் 25 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையுடன் செயல்பட்டு வரும் 8,000 சத்துணவு மையங்களை மூட  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் பசியால் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவியலாத சூழல் தமிழகத்தில் நிலவியது. இதைக் கருத்தில்கொண்டு முன்னாள் முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான்  `இலவச மதிய உணவுத் திட்டம்' .

சத்துணவு

அதன் பிறகு பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயரத் தொடங்கியது. இன்றும் தமிழகத்தில் அரசு வேலைகளில் உள்ள பலரும் இந்தத் திட்டத்தால் பயனடைந்தவர்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் `சத்துணவுத் திட்டமாக' மாற்றப்பட்டது. பள்ளிகளில் இத்திட்டம் நன்முறையில் செயல்பட்டு வந்தத் திட்டம்.

 

சத்துணவு

தற்போது தமிழகத்தில் 50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 43,200 சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 8,000 மையங்களை மூடும் அரசின் முடிவால் சத்துணவு ஊழியர்களும், ஏழைப் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.