வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (26/12/2018)

கடைசி தொடர்பு:19:48 (26/12/2018)

`நீங்கள் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால்..' - அ.தி.மு.க-வில் ஓ.ராஜா மீண்டும் இணைய இதுதான் காரணம்!

துரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமாக தேனி மாவட்டப் பொருளாளர் பதவியில் இருக்கும் செல்லமுத்து போட்டியிட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவும் போட்டியிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தலில் ஜெயித்த சிலருடன் கூட்டணி அமைத்து தலைவர் பதவியைக் கைப்பற்றினார், ஓ.ராஜா. இதனால், கடுப்பான தென் மாவட்ட அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் செய்தனர். வேறு வழியில்லாமல், சேர்மனாகப் பதவி ஏற்ற நாளன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓ.ராஜா

ஓ.ராஜா

இந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். நேரிலும், கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால், அவரைச் சேர்த்துக்கொண்டதாகச் சொன்னார்கள். ஆனால், இடைப்பட்ட நாள்களில் நடந்தது வேறு விஷயமாம். இதுபற்றி மதுரையைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறும்போது, ``என்னைக் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவமானம் தாங்க முடியவில்லை. வெளியே தலைகாட்ட முடியவில்லை. இல்லாவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியில்லை என்று எடப்பாடியிடம் நேரில் புலம்பினாராம். தற்கொலை செய்துகொள்வதாக ஓ.ராஜா சொன்ன அந்த வார்த்தைதான் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக் காரணமாய் அமைந்தது" என்கிறார். 

ஓ.ராஜாவைச் சேர்த்ததால், அமைச்சர்கள் இருவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். செல்லமுத்துவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஓ.ராஜா இறங்கியுள்ளார். பெரியகுளத்தில் நடக்கும் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் டி.டி.வி. தினகரன். 

- சூரஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க