வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:08:15 (27/12/2018)

எழுவர் விடுதலையை வலியுறுத்தும் ஓவியங்கள் - நாம் தமிழர் கட்சியினரின் நூதனப் போராட்டம்

ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்கக் கோரியும், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும்,  ஓவியங்கள் அனுப்பும் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

ஓவியங்கள்

இந்த நிகழ்ச்சி, நாம் தமிழர் கலை பண்பாட்டுப் பாசறை சார்பாக, கும்பகோணம்  பாலக்கரையில் உள்ள கலையகம் அரங்கில்  நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் உள்பட 27 இளம் ஓவியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள், ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக கலைநயமிக்க, பல  வித்தியாசமான ஓவியங்களை வரைந்தனர். இந்த ஓவியங்கள், தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட இருக்கின்றன. 

ஓவியங்கள்

இந்த நிகழ்ச்சிக்கு, நாம் தமிழர் கலை பண்பாட்டுப் பாசறை செயலாளர் அஸ்வின் பத்மநாபன் தலைமைதாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை செயலாளர், வழக்கறிஞர் மணி செந்தில் பங்கேற்று ஓவியர்களை வாழ்த்தினார். இதில், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

பரிசு

இதில் கலந்துகொண்டவர்களுக்கு, சான்றிதழ்களும் புத்தகங்களும் பரிசாக அளிக்கப்பட்டன. நாம் தமிழர் கலை பண்பாட்டுப் பாசறையின் தலைவர் கிருஷாந்த், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க