கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான அறிக்கை தயார்! - விசாரணைக் குழு தலைவி சிந்தா தகவல் | Report on Sattur HIV incident prepared, says EO

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (27/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (27/12/2018)

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான அறிக்கை தயார்! - விசாரணைக் குழு தலைவி சிந்தா தகவல்

விசாரணைக்குழு தலைவி சிந்தா

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது தொடர்பான விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகத் தொழில்நுட்ப விசாரணைக் குழு தலைவி சிந்தா தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனையில் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட ரத்தம் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் எனத் தெரியவந்தது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாத்தூர் அரசு மருத்துவமனை

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே இந்தப் பிரச்னை ஏற்பட்டது தொடர்பாகத் தமிழக அரசு, விருதுநகர் ரத்த சேகரிப்பு மையங்களில் உள்ள ரத்தங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித்துறை தலைவி சிந்தா, தொழில்நுட்ப கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட ரத்த வங்கிகளில் விசாரணை நடத்திவருகிறார். இதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் அளித்தார்.