`ஊழலில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க அரசு பரவாயில்லை!' - சி.பி.ராதாகிருஷ்ணன் | BJP's CP Radhakrishnan slam DMK over Corruption

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (27/12/2018)

`ஊழலில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க அரசு பரவாயில்லை!' - சி.பி.ராதாகிருஷ்ணன்

ழல் விவகாரங்களில் தி.மு.க.வை ஒப்பிடுகையில் ஆளும் அ.தி.மு.க அரசு பரவாயில்லை. பா.ஜ.க.வுடன் யாரை இணைத்தாலும் அவர்கள் குற்றம் செய்யும் கதவுகள் அடைக்கப்படும் என்பது உறுதி என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வந்தார். அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மக்கள் விரோதக் கூட்டணி ஸ்டாலின் தலைமையில் சேர்ந்துள்ளது. கடந்த முறை கிடைத்ததைப் போன்று இந்த முறையும் அவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும். வைகோ சொல்லும் சொல்லைக் கிளிப்பிள்ளை போல் ஸ்டாலின் கூறி வருகிறார். பயங்கரவாதம் இந்த மண்ணில் செயல்பட்டு வருவதை கைது நடவடிக்கைகள் காட்டுகிறது. இன்னும் தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட வில்லை. அதற்காகத் திறமை மிகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

நக்சல் அமைப்புடன் பிரிவினைவாத சக்தி இணைந்து செயல்பட்டு வருகிறது. இதை அரசு கண்டுகொள்ளவில்லை. சமுதாயத்தில் எந்த வேலை எடுத்தாலும் அதில் அர்ப்பணிப்போடு செய்யப்படுவது குறைந்து வருகிறது. திறமையுடன் செயல்படும் அதிகாரிகள் ஒதுக்கப்படுகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்காமல், நல்ல அதிகாரிகளை ஊக்கப்படுத்தாமல் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்காலத்தில் தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இனியாவது தமிழக அரசு உயர்ந்த விஞ்ஞானபூர்வமான நடவடிக்களை எடுக்க வேண்டும். ரத்ததானம் செய்பவர்களின் சரித்திரத்தையும் தெரிந்திருக்க வேண்டும். முழுவதும் பரிசோதனைக்குப் பின்னர் ரத்தம் சேமிக்க வேண்டும். அடுக்கடுக்கான முறைகளில் நிர்வாகம் சீர்திருத்தம் கொண்டு வராமல் எதிர் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

இதை  மாநில அரசு உணர்ந்து, இதே போன்ற விஷயம் இனி நடக்காமல் தடுக்க வேண்டும். இந்திய அரசியல் சூழ்நிலையில் கூட்டணியைத் தவிர்க்க இயலாது. தமிழகத்தில் பா.ஜ.க. மகத்தான கூட்டணியை உருவாக்கும். மேக்கே தாட்டூ அணை வந்தால் காங்கிரஸ் கட்சியைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும். ஊழல் விவகாரங்களில் தி.மு.க.வை ஒப்பிடுகையில் ஆளும் அ.தி.மு.க அரசு பரவாயில்லை. பா.ஜ.க.வுடன் யாரை இணைத்தாலும் அவர்கள் குற்றம் செய்யும் கதவுகள் அடைக்கப்படும் என்பது உறுதி. அரசும் உயர்நீதிமன்றமும் பாரம்பர்ய விவகாரங்களில் தலையிடக் கூடாது. கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் கொடுங்கோல் ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது" என்றார்.