வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (27/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (27/12/2018)

`மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு சார்ந்த விஷயம்!’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

`மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம். அதில், யாரும் ஒரு குறையும் கூறக்கூடாது’ என்று காஞ்சிபுரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காஞ்சிபுரம், மதம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அம்மனை தரிசிக்க வந்திருந்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உணர்வுபூர்வமான விஷயங்களில் மத்திய அரசு அவசரப்பட்டுச் செயல்படுகிறது என அ.தி.மு.க எம்.பி. அன்வர் ராஜா கூறியிருந்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

``மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம். அதில் யாரும் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது” என்றவர் ``அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், தினகரனை ஒருபோதும் இணைத்துக்கொள்ள மாட்டார்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூறு சதவிகிதம் நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் ஏற்பட்டுள்ள இணையதளக் கோளாறு காரணமாகவே சில இடங்களுக்கு நிவாரணம் சென்றடையாமல்  இருக்கிறது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணமும், வாழ்வாதார உதவித் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் அழிந்த மரங்களுக்கான உரிய நஷ்டஈடு வழங்குவதற்காகத் தமிழக அரசு விரைவாகவும் வேகமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க