6 ஓநாய் குட்டிகள்... 4 மான்குட்டிகள் - வண்டலூர் பூங்காவின் புதிய வரவு! | Indian Grey Wolf female had littered pubs in vandaloor zoo

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:07:38 (28/12/2018)

6 ஓநாய் குட்டிகள்... 4 மான்குட்டிகள் - வண்டலூர் பூங்காவின் புதிய வரவு!

குழந்தைகளின் பொழுது போக்கு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இந்திய ஓநாய் மற்றும் நீலமான்கள் குட்டியை ஈன்றுள்ளன. இதுவரை பராமரிப்பில் இருந்து வந்த அந்தக் குட்டிகள் இன்று முதல் பார்வையாளர்கள் கண்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்கா இந்திய ஓநாய்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குப் பார்வையாளர்கள் அதிக அளவில் வரத் தொடங்கி இருக்கிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் வகையில் கூடுதல் மின்கல ஊர்திகள், கூடுதல் வாகன நிறுத்தம், பாலுட்டும் அன்னையர் அறைகள் எனச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் பூங்கா

``பூங்காவில் உள்ள ஒரு பெண் இந்திய ஓநாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றது. அவை தொடர்ந்து மருத்துவ மேற்பார்வையில் இருந்து வந்தன. மருத்துவ மேற்பார்வை முடிந்து தற்போது நல்ல நிலைக்கு அந்தக் குட்டிகள் வந்ததால் தற்போது தாயுடன் சேர்த்து காட்சிக்கு விடப்பட்டுள்ளன. தற்போது 13 ஓநாய்கள் பூங்காவில் இருக்கின்றன. மேலும், இரண்டு பெண் நீலமான்கள் தலா இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளன. அந்தக் குட்டிகள் மான்கள் இருக்கும் கூடத்தில் காட்சிக்கு விடப்பட்டுள்ளன. குட்டிகளோடு மான்கள் உலவுவது குழந்தைகளைக் கவரும் வகையில் இருக்கும்” என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க