வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:07:51 (28/12/2018)

சென்னையில் முதல்வர் பழனிசாமி வெளியிடும் புத்தகம் - எம்.எஸ் தோனி பெற்றுக்கொள்கிறார்

பழனிசாமி - தோனி

`தி இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் பயணம் குறித்தும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீநிவாசனின் பங்களிப்பு குறித்தும் புத்தகம் ஒன்று இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இந்தப்  புத்தகத்தை வெளியிடுகிறார். அதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெற்றுக்கொள்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் உலகின் பெரும் கிரிக்கெட் பட்டாளமே கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஜி.ஆர் விஸ்வநாத், ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
 
மேலும் லட்சுமணன், கம்பீர், யுவராஜ், அஜய் ஜடேஜா, ஜகவல் ஸ்ரீநாத், சேவாக், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோன்று 60-களில் விளையாடிய தமிழக கிரிக்கெட்டர்கள் முதல் தற்போது வரையிலான பல வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். தற்போதைய தமிழக ரஞ்சி அணியின் வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களான ராயுடு, ஹர்பஜன் உள்ளிட்ட தற்போதைய சி.எஸ்.கே வீரர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.