`தி.மு.க வில் அழகிரி ஏற்றுக்கொள்ளப்படுவாரா...?’ - கனிமொழி எம்.பி பதில் | Will DMK admit M. K. Alagiri..? - Kanimozhi answers

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:07:53 (28/12/2018)

`தி.மு.க வில் அழகிரி ஏற்றுக்கொள்ளப்படுவாரா...?’ - கனிமொழி எம்.பி பதில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் நடந்த உட்கட்சி பூசல், தினகரனின் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த டிசம்பர் 14-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு தி.மு.க-வின் தலைமையகமான  அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களைக் கட்சியில் இணைப்பதற்கான பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. அதில் 30,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக தி.மு.க-வில் இணைந்தனர்.

கனிமொழி , அழகிரி , ஸ்டாலின்
 

இந்த நிகழ்வுகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க மகளிரணி செயலாளருமான கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வருவது  குறித்தும், மற்ற கட்சியில் இருந்து வருபவர்களை  எல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்கிறீர்கள்.. தி.மு.க-வில் சேர முயன்று வரும் அழகிரியைத் திரும்பவும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

கனிமொழி, அழகிரி

இதற்குப் பதிலளித்த கனிமொழி,  `பி.ஜே.பி தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே அவர்கள் தயாராக இல்லை. இந்த ஆட்சிக்குப் பிறகு வரவுள்ள ஆட்சி நல்லவிதமாக அமையும்.  யாரைக் கட்சியில் சேர்க்க வேண்டும், யார் கட்சியில் சேரக் கூடாது என்ற முடிவுகளைக் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.