அரசு மருத்துவமனை ரத்த வங்கிகள் எப்படிச் செயல்படுகின்றன..? நேரடி ரிப்போர்ட்! #SpotVisit | What is the process followed in government hospital for blood donation ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (28/12/2018)

கடைசி தொடர்பு:11:45 (28/12/2018)

அரசு மருத்துவமனை ரத்த வங்கிகள் எப்படிச் செயல்படுகின்றன..? நேரடி ரிப்போர்ட்! #SpotVisit

அதிகம் கவனம் தேவைப்படுகிற இந்த ரத்த தான வங்கியில் தவறு எங்கே நிகழ வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்கள் எனக் கேட்டேன்.

அரசு மருத்துவமனை ரத்த வங்கிகள் எப்படிச் செயல்படுகின்றன..? நேரடி ரிப்போர்ட்! #SpotVisit

சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய செய்தி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் முறை எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாகச் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றேன். அங்குள்ள ரத்த வங்கி இணை ஆணையர் சுபாஷிடம் பேசியபோது ``இங்க ஒரு நாளைக்கு முப்பதிலிருந்து ஐம்பது பேர் வரை ரத்த தானம் செய்ய வர்றாங்க. கொடையாளர்கள் உள்ளே நுழைந்ததும் அவங்களுக்கு ஐந்து விதமான டெஸ்ட் எடுப்போம். அதுல அவங்க தகுதியானதுக்கு அப்புறம்தான் அவங்க ரத்தம் கொடுக்க அனுமதிப்போம் அவங்க ரத்தம் கொடுத்த பிறகு கொடையாளிக்கு ஊட்டச்சத்து கொடுத்து அனுப்புவோம். அதுக்குப் பிறகுதான் ரத்த வங்கியோட வேலைகள் ஆரம்பிக்கும். கொடையாளிகள்கிட்ட இருந்து கிடைக்கப்பெற்ற ரத்தத்தை டெஸ்ட்யூப்ல போட்டு, அதுக்கு ஒரு நம்பர் போட்டு ட்யூப்ல எழுதுவோம். அதை மேற்படி டெஸ்ட்டுக்கு எடுத்துட்டுப் போவோம். இது ஒரு பக்கம் நடக்கும். இன்னொரு பக்கம் ப்ளட் பேங்க்ல டெஸ்ட் பண்ணாததை `அன்டெஸ்ட்'னு வைப்போம். டெஸ்ட் பண்ணினதை தனியா வைப்போம். 

ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம்

ரிசல்ட்ல நெகட்டிவ்னு வர்றதை தனியாவும் பாசிட்டிவ்னு வருகிறதைத் தனியாவும் பிரிச்சுடுவோம். திரும்பவும் அதை டெஸ்ட் பண்ணுவோம். அதுமட்டுமல்லாம இதுல இன்னும் பலகட்ட சோதனைகள் இருக்கு. அதெல்லாம் முடிஞ்ச அப்புறம்தான்  தேவைப்படுறவங்களுக்கு ரத்தத்தைக் கொடுப்போம். இது ஒரு பெரிய ப்ராசஸ். இந்த ப்ராசஸ்ல ஏதாவது சின்னப் பிசகு நடந்தால்கூட தவறு நடக்க வாய்ப்பிருக்கு" என்றார். 

ரத்தப் பரிசோதனை

``அதிகம் கவனம் தேவைப்படுகிற இந்த ரத்த தான வங்கியில் தவறு எப்படி நிகழ்கிறது?"  

``மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு ரத்ததான வங்கியிலும் ஆலோசகர்னு ஒருத்தர் இருக்கணும். ரத்தம் கொடுக்க வர்றவங்கள அவங்க பின்னணி என்ன, இதுக்கு முன்னாடி எப்போ ரத்தம் கொடுத்திருக்காங்க, ரத்தம் கொடுக்கிறதால என்ன பயன், எந்தெந்தச் சூழல்ல எல்லாம் ரத்தம் கொடுக்கக் கூடாது... இப்படி பல விஷயங்கள் குறித்து ரத்தம் கொடுக்க வர்றவங்ககிட்ட பேசணும். அதன்மூலமாகத்தான் ரத்தம் கொடுக்க வர்றவங்களும், அவர்கிட்ட அதை வாங்கிக்கிற நாமும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து அடுத்தகட்டத்துக்குப் போக முடியும். ரத்தம் கொடுக்கிறதுக்கு உண்டான மருத்துவத் தகுதி இல்லாம வர்றவங்கள அங்கேயே திருப்பி அனுப்பிட முடியும். சோகம் என்னென்னா இன்னைக்கு இந்த வேலை செய்ற ஆலோசகர் பணிக்குப் பல மருத்துவமனைகள்ல உள்ள ரத்த வங்கிகள்ல ஆளே இல்லை. அப்படி ஒருத்தர்  இல்லாததால லேப் டெக்னிஷியனே இந்த வேலையைப் பார்க்க வேண்டியிருக்கு. அதனாலே பணிச்சுமை அதிகமாகி குழப்பம் நேரிட வாய்ப்பு அதிகமாகுது. அந்தந்த வேலையை அவங்க அவங்க செய்தா இந்தப் பிரச்னை இருக்காது. 

ரத்தப் பரிசோதனை

இன்னொரு விஷயம், ரத்த வங்கியில வேலை செய்றவங்க தங்களை ரொம்ப அப்டேட்டா வெச்சுக்கணும். வருஷத்துக்கு ஒருமுறை ட்ரைனிங் அட்டண்ட் பண்ணணும். இதையெல்லாம் கண்காணிக்கிற ஒரு வலுவான அமைப்பு வேணும். இப்படி எல்லாம் இருந்தா மட்டுந்தான் இனிவரும் காலத்தில சமீபத்துல நடந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுக்க முடியும்" என்றார் ரத்த வங்கி இணை ஆணையர் சுபாஷ். 

 

 


டிரெண்டிங் @ விகடன்