ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினருக்கு ஜாமீன்! திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் வழங்கியது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் அனைவருக்கும் அந்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2012 மற்றும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரை பெருவிழாவில் அவதூறாக பேசியது, காலம் கடந்து பேசியது, காவல்துறைக்கு இடைஞ்சலாக இருந்தது போன்ற பல்வேறு வழக்குகளில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு, திக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் மீது திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அவர்கள் அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி சிவா, அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் காடுவெட்டி குரு மீது இன்று மேலும் 4 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்த மாமல்லபுரம் விழா சம்பந்தமாக ஒரு பிரிவின் கீழ் மட்டும் குரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்போது அதே விழாவில் நடந்த சம்பவத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டு நடந்த விழாவில் அவதூறாக பேசியது, காலம் கடந்து பேசியது, காவல்துறைக்கு இடைஞ்சலாக இருந்தது போன்ற எந்தவொரு பிரிவின் கீழும் அன்புமணி ராமதாஸ் சேர்க்கப்படாமல் இருந்தார். தற்போது இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மீதும் புதிதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-பா.ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!