வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (28/12/2018)

கடைசி தொடர்பு:11:45 (28/12/2018)

ஹரியானா டு கேரளாவுக்கு சாராயம் கடத்தல்! - 8,750 லிட்டருடன் நாமக்கல்லில் சிக்கிய கும்பல்

ஹரியானாவிலிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை நாமக்கல் அருகே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 எரிசாராயம்  பறிமுதல்

வடமாநிலங்களிலிருந்து, எரிசாராயம் கடத்திச் செல்லப்படுவதாக, நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் எஸ்.பி. செந்தில் தலைமையிலான போலீஸார், நேற்று காலை 6.30 மணிக்கு, கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் நோக்கிச் சென்ற கர்நாடக மாநில லாரியை சோதனை செய்தனர். 13 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றிக் கூறிய போலீஸார், '750 கேன்களில் 8,750 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 13 லட்சம் ஆகும். ஹரியானாவிலிருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்த இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஹரியானாவில் உள்ள பாலாஜி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து லிக்யூட் குளோரின் கொண்டு வருவதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இந்த எரிசாராயத்தை கடத்தி வந்துள்ளனர். இருவரைக் கைது செய்துள்ளோம். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது' எனத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் ஹரியானா மாநிலத்திலிருந்து நாமக்கல் வழியாகக் கடத்தப்பட்ட  ஒரு எரிசாராய லாரியை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க