`ஒரு ஊர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்ற ஊரில் பங்கேற்கக்கூடாது’ - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | District officers discussion for Alanganallur jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:07:25 (29/12/2018)

`ஒரு ஊர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் மற்ற ஊரில் பங்கேற்கக்கூடாது’ - ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

தமிழர் திருநாளாம் பொங்கலை எதிர்பார்த்திருக்கும் தமிழக மக்கள், அதனுடன் ஜல்லிக்கட்டையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அலங்காநல்லூர்

இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகமே கிளர்ந்து போராடி பெற்ற உரிமை என்பதால், கடந்த வருடம்போல் இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளைப் பார்க்க தமிழக மக்கள் மதுரை மாவட்டத்தை நோக்கி வரவுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நேரடியாக நடத்துகிறது. அது பற்றிய அறிவிப்பையும் தமிழக அரசு கடந்த 27-ம் தேதி வெளியிட்டது.  மற்ற மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிக்கும் பணியை  மட்டும் அரசு செய்யும். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆட்சியர் நடராஜன், எஸ்.பி. மணிவண்ணன், சோழவந்தான் எம் எல் ஏ. மாணிக்கம் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும், ஜல்லிக்கட்டு விழா கமிட்டிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 650 காளைகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும் என விழா கமிட்டியினர் கோரிக்கை வைத்தனர்.
ஒரு ஊரில் பங்கேற்ற காளைகள் மற்றொரு ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கக்கூடாது என்றும்,  ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் காலை 8 மணிக்குத் துவங்கி மதியம் 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க