`இப்பத்தான் அரசாணை வருது; நாங்கள் குழம்பிவிட்டோம்!'- மாணவிகள் பேட்டி | Examination Board's report confused us...- Students says about reduces the board exam writing time

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:55 (29/12/2018)

`இப்பத்தான் அரசாணை வருது; நாங்கள் குழம்பிவிட்டோம்!'- மாணவிகள் பேட்டி

`இப்பத்தான் அரசாணை வருது; நாங்கள் குழம்பிவிட்டோம்!'- மாணவிகள் பேட்டி

பன்னிரண்டாம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலை நேற்று அரசாணையாக வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இதன்படி மொழிப் பாடம் அல்லாத முக்கிய பாடங்களான இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியில், தாவரவியல், வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை போன்ற பாடப்பிரிவுகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்கிறது அரசாணை. இதுகுறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டோம்.

நிவிதா பள்ளி மாணவி  -  விழுப்புரம் :

``நான் இப்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போறேன். அரசு இப்ப சொல்லியிருக்கிற ரூல்ஸ் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஸ்கூல்ல நடைமுறைப்படுத்திட்டாங்க. ஆனா இப்பத்தான் முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டிருக்கு அவ்வளவுதான். அதே மாதிரி பன்னிரண்டாம் வகுப்புக்கான மதிப்பெண்களை 1200ல் இருந்து 600 குறைச்ச செய்தி வந்தப்பவே அதையும் ஸ்கூல்ல நடைமுறைப்படுத்திட்டாங்க. அதனால நாங்க 70 மதிப்பெண்ணுக்குத்  தேர்வு எழுதப்பழகிவிட்டோம். 2.30 மணிநேரம் கால அவகாசம் தேர்வு எழுதப் போதுமானதாகவும் உள்ளது. ஆனா ஊடகங்கள் இதை புதுச் செய்தியா நேத்து போடவும் கொஞ்சம் குழம்பிட்டோம். மறுபடியும் நேரத்தை குறைச்சுட்டாங்கனு பயந்துட்டோம்'' என்றார்.

                                                        மாணவர்கள்              

சத்ய மூர்த்தி  - ஆசிரியர்  - விழுப்புரம்:

``நேரக்குறைப்பு ஓராண்டுக்கு முன்பே எல்லாப் பள்ளியிலும் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், முறைப்படி அரசாணை மூலம் தகவல் வரவில்லை அவ்வளவுதான். அரசாணை வெயிட்டதும் ஊடகங்கள் இதைப் புதுச் செய்தியாக அறிவித்ததும் மாணவ- மாணவிகள் குழப்பம் அடைந்துவிட்டார்கள்'' என்று கூறினார்.