வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:31 (29/12/2018)

`இந்தப் புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இல்லை! - விஜயகாந்த்தை நினைத்து உருகும் ரசிகர்கள் 

உடல்நிலை காரணமாக அரசியல் கூட்டங்களில் பங்குபெறாமல் இருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். மக்கள் மனதில் அவருக்கென்று எப்போதுமே தனி இடம்தான். பொதுக் கூட்டங்களிலும் எந்தவித கொண்டாட்டங்களிலும் விஜயகாந்த் அதிகமாகப் பங்குபெறுவதில்லை என்றாலும் எப்போதாவது அவரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும். மக்களும் அந்தப் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வைரலாக்கிவிடுவார்கள். எல்லாப் புகைப்படங்களிலும் விஜயகாந்த் சிரித்தபடியே உற்சாகமாக போஸ் கொடுத்திருப்பார். 

விஜயகாந்த்
 

சமீபத்தில், மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் பிரேமலதா விஜயகாந்தும் சென்றிருந்தார். அமெரிக்காவில் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் விஜயகாந்த்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல புகைப்படங்களில் விஜயகாந்த் உற்சாகமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த்
 

புகைப்படங்களை உற்சாகமாகச் பகிர்ந்துவரும் தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள், `இந்தப் புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இல்லை தலைவா’, ‘2019 திருப்புமுனை ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்’, ‘தலைவா மீண்டும் கம்பீரமான நடையோடு, சிம்மக் குரலோடு வா... காத்திருக்கிறோம்..’ என்று பதிவிட்டு வருகின்றனர். 

பிரபாகரன்
 

கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் முதற்கட்ட சிகிச்சைக்காக சென்ற விஜயகாந்த் ஒரு மாத கால சிகிச்சைக்குப் பின்னர் தமிழகம் திரும்பினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளை மேற்கொண்டார். தற்போது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார். கட்சிப் பொறுப்புகளை விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன் கவனித்து வருகிறார். நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபாகரன் ‘அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் என் தந்தை விரைவில் நலம் பெறுவார். அதே கம்பீரக் குரலுடன் மீண்டு வருவார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அவரது உடல்நிலை சரியாகி விடும் என நம்புகிறேன்’ என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க