எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்! | Sudha Seshayyaan appointed as Vice Chancellor in mgr university

வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (29/12/2018)

கடைசி தொடர்பு:14:26 (29/12/2018)

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கீதா லட்சுமியின் பதவிக்காலம் முடியும் முன்பு அதாவது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. 

எம்.ஜி.ஆர் பல்கலைகழகம்

இந்தp பதவிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கல்வி மற்றும் அனுபவ தகுதி நிறைந்தவர்கள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமியின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இன்று புதிய துணைவேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

முன்னதாக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராக இருந்த சுதா, பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் உடற்கூறு இயல் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது அவரது உடலை டாக்டர் சுதாதான் பதப்படுத்தினார். பின்னர் ஜெயலலிதா உடல் எம்ஃபார்மிங் செய்யப்பட்டதாக எழுந்த விவாதத்தின்போது சுதா, ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி அதற்கு விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.