`வேள்பாரி புத்தகமல்ல அது ஒரு புரட்சி' - மு.க.ஸ்டாலின் புகழாரம்! #VelpariBookLaunch | velpari book launch event starts at chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (29/12/2018)

கடைசி தொடர்பு:19:45 (29/12/2018)

`வேள்பாரி புத்தகமல்ல அது ஒரு புரட்சி' - மு.க.ஸ்டாலின் புகழாரம்! #VelpariBookLaunch

விகடனின் `வீரயுக நாயகன் வேள்பாரி'  நாவல் வெளியீட்டு விழா சென்னையில் தொடங்கியுள்ளது.

வேள்பாரி விழா

வாசகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற `வீரயுக நாயகன் வேள்பாரி' தொடர் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து தற்போது நாவலாக வெளிவருகிறது. சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் உள்ள குமாரராஜா முத்தையா ஆடிட்டோரியத்தில் இன்று மாலை மணிக்கு தொடங்கியது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி இலவசம்.

வேள்பாரி விழா

நிறைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேள்பாரி தொடரிலிருந்து பெயர் தேர்வு செய்து சூட்டியிருக்கிறீர்கள். அவர்களுக்கு விழாவில் ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அதோடு, வேள்பாரி வாசகர்கள் பங்குகொள்ளும் விவாத நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.

வேள்பாரி விழா

வேள்பாரி ஆசிரியர் சு.வெங்கடேசன் முன்னிலையில் விவாத நிகழ்ச்சியில் வாசகர்கள் வேள்பாரியைப் பற்றிப் பேசவுள்ளனர். இதேபோல் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ``கலைஞர் இருந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் வெளியிட்டிருந்தால் எழுத்தாளர் சு.வெங்கடேசனை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். வேள்பாரியை முன்கூட்டியே வெங்கடேசன் கொடுத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் என் மனதில் இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மாவீரன் பாரி என்பதை வேள்பாரி நூல் காட்டுகிறது. தமிழ் உலகத்தின் இதிகாசம் வேள்பாரி. இது நூல் அல்ல புரட்சி" என்றார்.