சட்டமன்றக் கூட்டத்தொடர் - அனல் கிளப்ப தி.மு.க திட்டம்! | DMK plan to raise the issues. coming Assembly sesion

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (29/12/2018)

கடைசி தொடர்பு:21:10 (29/12/2018)

சட்டமன்றக் கூட்டத்தொடர் - அனல் கிளப்ப தி.மு.க திட்டம்!

தி.மு.க

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் என்று தி.மு.க சட்டமன்றக் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் முதல்நாள் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, மறுநாள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய அவை ஒத்திவைக்கப்படும். ஆனால், தீர்மானம் நிறைவேற்றி அதன்மீது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க தரப்பில் வைக்க உள்ளார்கள்.

மேலும், மேகதாது பிரச்னை, ஸ்டெர்லைட் பிரச்னை, கஜா நிவாரணம், கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க கிளப்பத் தயாராக உள்ளது. மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்ற வாதத்தையும் இந்தக் கூட்டத்தொடரில் வைக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.

2-ம் தேதி அன்று ஆளுநர் அறிவிக்கும் அறிப்புகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பது குறித்து அன்று மாலை நடைபெற உள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் சட்டமன்றக் கூட்டம் இது என்பதால், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அனல் கிளப்பத் திட்டமிட்டுள்ளது தி.மு.க.