`நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இளைஞர்களுடன் உரையாடல்' - கோவையைக் கலக்கிய அன்புமணி! | Anbumani ramadoss visit to coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:15 (31/12/2018)

`நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இளைஞர்களுடன் உரையாடல்' - கோவையைக் கலக்கிய அன்புமணி!

கோவையில், அன்புமணி ராமதாஸ் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு இளைஞர்களுடன் உற்சாகமாக உரையாடியுள்ளார்.

அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இன்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அன்புமணி நடைப்பயிற்சி சென்றுள்ளார். அவருடன், கட்சிப் பிரமுகர்கள் சிலரும் சென்றுள்ளனர்.

அப்போது கோவை மக்களிடம் தங்களது பிரச்னைகளை அன்புமணி கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, இளைஞர்களிடம் உற்சாகமாக பேசிய அன்புமணி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, இளைஞர்களுடன் பேசியபடியே, உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், சைக்கிள் ஓட்டியும் உற்சாகமடைந்துள்ளார்.

அன்புமணி

“அன்புமணிக்கு கோவை எப்போதுமே பிடிக்கும். கோவை பிரச்னைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அதிகளவு மரங்கள் வெட்டியதால், கோவையின் கிளைமேட் மாறுவதை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று மக்களிடம் எடுத்துரைத்தார். கோவையில் ரேஸ்கோர்ஸ் போன்று, மேலும் சில பகுதிகளை அமைக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்” என்று பரவசப்படுகின்றனர் பா.ம.க நிர்வாகிகள்.